'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் பெண்கள் நகையுடன் நடமாட முடியும்'

ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டகளூர்கேட் பகுதியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகரன் தலைமையில், தெருமுனை பிரசாரம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா கலந்துகொண்டனர். தொடர்ந்து, தங்கமணி பேசுகையில், ''பெண்கள், நகைகளை போட்டுக்கொண்டு சாலையில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால், அ.தி.மு.க., ஆட்சி வந்தால்தான் முடியும்,'' என்றார். மேலும், தி.மு.க., ஆட்சியின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில், துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


ஆண்டகளூர்கேட்டில் தொடங்கி, 2 கிலோ மீட்டருக்கு நடந்து சென்று கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். உடன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பிரகாசம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் தினகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement