பூட்டு போட்டு நம்பிக்கையை திறக்கலாம்..


தாலே வாலே மகாதேவ்

உ.பி.,பிரயாக்ராஜ்ஜில் முக்திகஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நாகேஸ்வர் மகாதேவ் கோவில்,இங்கு நடைபெறும் வித்தியாசமான வழிபாடு காரணமாக இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்படியென்ன வித்தியாசமான வழிபாடு என்கிறீர்களா?
Latest Tamil News
மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஒரு புதுப் பூட்டை எடுத்துக் கொண்டு வருகின்றனர்,பின் அந்தப் பூட்டை கோவிலில் கிடைக்கும் இடத்தில் வைத்து பூட்டிவிட்டு மறக்காமல் சாவியை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

தங்களது அரிய ஆசைகள், ஆழமான நோக்கங்கள்,மனக்குமுறல்கள் அல்லது குடும்ப நலன்கள்
இவை அனைத்தையும் ஒரு பூட்டில் நிரப்பி,அதை கோவில் கம்பிகளில் பூட்டி தொங்கவிடுகின்றனர்.
Latest Tamil News
இந்த பூட்டை நான் பூட்டி விட்டேன்; என் ஆசையும், நம்பிக்கையும் இங்கே அடைபட்டிருக்கும்.
அந்த பூட்டு மூலமாக எனது வேண்டுதலை பகவான் நாதேஸ்வரர் திறந்துவைப்பார் என்ற நம்பிக்கையுடன் பின் செல்கின்றனர்.

எடுத்துச் செல்லும் சாவியை வீட்டில் உள்ள சாமி படத்திற்கு அருகில் வைத்துவிடுகின்றனர்,இனி தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வழக்கமான வேலைகளை கவனிக்கச் சென்றுவிடுகின்றனர்.

ஒரு சிலர் மட்டும் வேண்டுதல் நிறைவேறியதும் தாங்கள் கோவிலில் பூட்டிய பூட்டை தேடிப்பிடித்து திரும்ப திறந்து வீட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

கோவிலில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரு பூட்டு தொங்குகிறது, ஒவ்வொரு பூட்டும்,ஒருவரின் வேண்டுதலை,வேண்டுகோளை,கனவுகளை,கவலைகளை,நம்பிக்கைகளை சுமந்து கொண்டு இருக்கிறது.
Latest Tamil News
பூட்டிற்குள் பூட்டியிருக்கும் வேண்டுதலை பகவான் திறப்பார் நிறைவேற்றுவார் என்பதை பலமாக நம்புகின்றனர்.

நம்பிக்கைதானே வாழ்க்கை

-எல்.முருகராஜ்

Advertisement