சர்வதேச பிடே ரேபிட் ரேட்டிங் செஸ் 'டாப் 10' இடங்களில் தமிழக வீரர்கள்
சென்னை, காட்டாங்கொளத்துாரில் நடந்த சர்வதேச அளவிலான, 'பிடே ரேபிட் ரேட்டிங்' செஸ் போட்டியில், தமிழக வீரர்கள் முதல் பத்து இடங்களை பிடித்து அசத்தினர்.
எஸ்.ஆர்.எம்., பல்கலை, கோல்டன் நைட் சீஸ் அகாடமி மற்றும் மாஸ்டர் மைண்ட் செஸ் அகாடமி இணைந்து, சர்வதேச அளவிலான பிடே ரேபிட் ரேட்டிங் செஸ் போட்டியை, காட்டாங்கொளத்துாரில் நடத்தின.
இதில், நான்கு நாடுகள் மற்றும் 9 மாநிலங்களை சேர்ந்த, 327 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட மொத்தம் 609 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். முதல் நாள் போட்டியை, பல்கலையின் இணை இயக்குனர் கிருஷ்ணமோகன், விளையாட்டுத்துறை இயக்குனர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போட்டிகள், மொத்தம் 10 சுற்றுகள் அடிப்படையில் நடத்தப்பட்டன. அனைத்து சுற்றுகள் முடிவில், 8 புள்ளி 5 புள்ளிகள் பெற்று, தமிழக வீரர் முகமது அனீஸ் முதலிடத்தை பிடித்தார்.
அவரைத் தொடர்ந்து, தமிழக வீரர்கள் செந்தில்மாறன், ஆதர்ஷ், ஷியாம், தேஜஸ்வினி ஆகியோர், தலா 8 புள்ளிகள் பெற்று, முறையே இரண்டு முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.
கவுசிக், ஆர்.ஆர்.லக் ஷ்மணன், சிவன் ரோஷன், ஹரி கணேஷ் மற்றும் வர்கீஸ் ஆகியோர் 7. 5 புள்ளிகள் பெற்று, முறையே ஆறு முதல் பத்து இடங்களை கைப்பற்றினர்.
இவர்களைத் தொடர்ந்து, மேலும் 101 பேருக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலையின் நிர்வாக இணை இயக்குனர் திருமுருகன் பரிசுகளை வழங்கினார்.
மேலும்
-
அச்சுறுத்திய காட்டுயானைகள் அச்சம் அடைந்த தொழிலாளர்கள்
-
கிணற்றுக்குள் விழுந்தவர் பலி: நால்வர் மீது வழக்கு
-
கடன் பிரச்னையில் ஒருவக்கு கத்திகுத்து
-
நின்ற லாரி மீது பைக் மோதி 3 பள்ளி மாணவர்கள் மரணம்
-
தேனி மருத்துவக்கல்லுாரி குப்பை கொட்ட... வழியின்றி தவிப்பு: சுகாதார சீர்கேட்டால் மாணவர்கள் பாதிப்பு
-
லோயர்கேம்ப் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் காஸ் கசிவு -அருகில் வசித்த பொதுமக்கள் பாதிப்பு