தவற விட்ட தங்க வளையல் முதியவரிடம் ஒப்படைப்பு

சென்னை, அரும்பாக்கத்தில் முதியவர் தவறவிட்ட தங்க வளையலை, போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்தவர் கேசவன், 53. கடந்த, 10ம் தேதி காலை வீட்டிலிருந்து, இரு தங்க வளையலை எடுத்துக்கொண்டு, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் சென்றார்.

அங்கு, ஒரு வளையலை அடகு வைத்துவிட்டு, அதில் கிடைத்த பணத்தை அருகில் உள்ள வங்கியில் செலுத்திவிட்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மற்றொரு வளையலை காணவில்லை.

அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில், தங்கவளையல் எடுத்து வைத்திருந்த நபரை கண்டறிந்து, அவரிடம் இருந்து, வளையலை வாங்கி முதியவரிடம் ஒப்படைத்தனர். போலீசாருக்கு, முதியவர் நன்றி தெரிவித்தார்.

Advertisement