கட்சியில் சேர விரும்பினால் மட்டுமே இணைக்க வேண்டும்! செந்தில் பாலாஜி அட்வைஸ்
திருப்பூர்; தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் தகவல்கள் பெற்று பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், வீடு வீடாகச் செல்லும் கட்சியினர் பொதுமக்களிடம் விவரங்களையும், மொபைல் போன் எண்ணையும் பெற்று கொண்டு, கட்சியில் இணைத்து விடுவதாக பரவலாக புகார் எழுந்தது. இது பிற கட்சியினர் மத்தியில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.இதனால், கொங்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, ஓரணியில் தமிழ்நாடு பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல் விவரம்:
'ஓரணியில் தமிழ்நாடு'பணியில் ஒரு வீட்டில் ஒரு மொபைல் போன் எண் மட்டும் பெற்று ஓ.டி.பி., பெறக்கூடாது. அனைத்து குடும்ப உறுப்பினர்களிடமும் மொபைல் போன் எண் வாங்க வேண்டும். குறைந்த பட்சம் 2 அல்லது 3 எண்கள் கட்டாயம் பெற வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் அது கணக்கில் எடுக்கப்படாது. கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தால் மட்டுமே இணைக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கையில் சரியான தகவல்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ரூ.2,000 லஞ்சத்துக்காக வேலையை இழந்த அதிகாரி
-
வன விலங்கு தாக்குதல் 5 ஆண்டில் 254 பேர் பலி
-
சிர்சி - குமட்டா நெடுஞ்சாலை தரம் உயர்த்தும் பணி மந்தம்
-
சிறுத்தை சிக்கியதால் கிராமத்தினர் நிம்மதி
-
காவிரி கரையில் மணல் அள்ளுவதில் மோதல் ஒருவர் வெட்டிக்கொலை; 4 பேர் படுகாயம்
-
ஆட்டோக்களில் விளம்பரம் போக்குவரத்து துறை எச்சரிக்கை