ஆட்டோக்களில் விளம்பரம் போக்குவரத்து துறை எச்சரிக்கை
பெங்களூரு: ஆட்டோக்களின் பின்னால், விளம்பர போஸ்டர்கள் ஒட்டினால், அபராதம் விதிக்கப்படுமென போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆட்டோக்களின் பின்புறத்தில், திரைப்படம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட, எந்த விளம்பரங்களும் பொருத்தக் கூடாது. அப்படிப் பொருத்துவது விதிமீறல். ஆனால் பெங்களூரின் பல இடங்களில், ஆட்டோக்களின் பின்புறம், விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதை பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆட்டோக்களின் பின்புறம், துண்டுப் பிரசுரங்கள், விளம்பர போஸ்டர்கள், திரைப்பட விளம்பரங்கள், வெவ்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை ஒட்டிக்கொண்டு சுற்றுகின்றன. 100 ரூபாய் 200 ரூபாய் ஆசையால், விதிமீறலாக விளம்பரங்கள், போஸ்டர்கள் ஒட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே பல்வேறு இடங்களில், இத்தகைய விளம்பரங்கள் தென்பட்ட ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டது. சில ஓட்டுநர்களுக்கு, விழிப்புணர்வு இல்லாமல் இதுபோன்று செய்கின்றனர். ஆட்டோக்கள் மீது, விளம்பரங்கள் ஒட்டினால், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே விதிகளை ஓட்டுநர்கள் மீறக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி