பொது 5 போன்கள், 'டேப்' திருடிய வாலிபர் சென்ட்ரலில் கைது

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியரிடம் ஐந்து மொபைல் போன்கள், 'டேப்' திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியர் காத்திருப்பு பகுதியில், அடிக்கடி மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதாக, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வந்தன.

இதுதொடர்பாக, சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று முன்தினம் நடைமேடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்றிருந்த வாலிபரிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை துரத்தி பிடித்தனர். விசாரணையில், வியாசர்பாடி, சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா, 26, என தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநரான இவர், சென்ட்ரலில் பயணியரிடம் இருந்து மொபைல் போன்கள் திருடி செல்வது தெரியவந்தது. இவரிடம் இருந்து ஐந்து மொபைல்போன்கள், ஒரு டேப் என, 1.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement