பள்ளியில் மாணவர் பார்லி., தேர்தல்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. 8 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 2ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு 3, 4 ல், வேட்பு மனு தாக்கல் நடந்தது.
நேற்று முன்தினம், வேட்பு மனு வாபஸ் நடந்தது.பள்ளி பிரதமர், துணை பிரதமர், சபாநாயகர், கல்வி, உடற்கல்வி, சுகாதார, கலை , பண்பாட்டு துறை அமைச்சர்கள் உட்பட 12 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 88 மாணவர்கள் மனு செய்தனர்.
இறுதியில் 58 பேர் போட்டியிட்டனர். நடந்த தேர்தலில் 4 அறைகளில் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டு மாணவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளி தாளாளர் சிவக்குமார் கண்காணித்து ஆலோசனை வழங்கினார்.
முதல்வர் திலகம் கூறுகையில், ''1332 மாணவர்கள் ஓட்டளித்தனர். மாணவர்களுக்கான தலைமை பண்பு குறித்த பயிற்சி, நல்லொழுக்கம் ,கட்டுக்கோப்பாக வழி நடத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர் பார்லிமென்ட் தேர்தலில் வென்றவர்கள் ஒரு ஆண்டு பதவியில் இருப்பர். பள்ளி விழாக்கள், பொது நிகழ்வுகள், சமூக சேவைகளில் ஈடுபடுவர்.
வருங்காலங்களில் சரியான தலைமையை தேர்ந்தெடுக்க இதுபோன்ற வாய்ப்புகள் உதவியாக இருக்கும். ஆக. 15ல் பள்ளி வளாகத்தில் வென்றவர்களுக்கான பதவி ஏற்பு விழா நடக்கும்'' என்றார்.
ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் பாரதிராஜா, துணை முதல்வர் வெண்ணிலா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.--
மேலும்
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி