கட்டுரை, பேச்சுப்போட்டி

திண்டுக்கல்: தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 10ம் தேதி நடந்தது.

கட்டுரைப் போட்டியில் நல்லாம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளி 9 ம் வகுப்பு மாணவி ஜெகதாஸ்ரீ முதல் பரிசு, சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி 11ம் வகுப்பு மாணவி பிரீத்தா 2ம் பரிசு, திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி வினய விகாசினி மூன்றாம் பரிசு பெற்றனர்.

பேச்சுப் போட்டியில் செக்காபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி முத்துமீனாட்சி, திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப் பள்ளி 12 வகுப்பு மாணவர் ஜீவா, நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி முனிஸ்கா பரிசு பெற்றனர்.

இதற்கான பரிசை கலெக்டர் சரவணன் வழங்கினார்.

Advertisement