போலீஸ் செய்திகள்

கேட்பாரற்ற டூவீலர்

வேடசந்துார்: அய்யனார் நகர் அருகே டூ வீலர் ஒன்று கேட்பாரற்று மூன்று நாட்களாக ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்தது. வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் டூ வீலரை மீட்டு உரிமையாளரை தேடுகின்றனர்.

கழுத்தறுத்து தற்கொலை

திண்டுக்கல் : முள்ளிப்பாடியை சேர்ந்தவர் தனுஷ்கோடி 53, தச்சுத்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கமுடைய இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் கண்ணாடித்துண்டால் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனைப்பார்த்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மது விற்றவர் கைது

குஜிலியம்பாறை : லந்தகோட்டை சாலம்பட்டி பகுதியில் சுப்பிரமணி 67, என்பவரது பெட்டிக்கடையில் மது விற்பனை செய்தார்.அவரை குஜிலியம்பாறை போலீசார் கைது செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

நத்தம்: குட்டூர் பிரிவு அருகே புன்னப்பட்டியை சேர்ந்த கண்ணன் 48, மது விற்பனை செய்தார். அவரை நத்தம் போலீசார் கைது செய்தனர். 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

ஒட்டன்சத்திரம்: வேடசந்துார் கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் முரளி 40. திருப்பூரில் இருந்து திண்டுக்கல் சென்றார். ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற போது கிணறு ஒன்றில் தவறி விழுந்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் முரளியை மீட்டனர்.

Advertisement