மக்களிடம் கனிவுடன் பேசுங்கள் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., பாடம்

திருவொற்றியூர்,

'அதிகாரிகள் பொதுமக்களிடம் கனிவுடன் பேசி, கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும்' என, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் அறிவுறுத்தினார்.

திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், 13 துறைகளின், 43 சேவைகளை எளிதாக பெறுவது குறித்த ஆலோசனைக்கூட்டம், நேற்று காலை, மண்டல உதவி கமிஷனர் விஜயபாபு தலைமையில் நடந்தது.

இதில், வடசென்னை எம்.பி., கலாநிதி, மாதவரம் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., மாவட்ட செயலருமான சுதர்சனம், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சுதர்சனம் எம்.எல்.ஏ., பேசுகையில்,''பொதுமக்கள் கூறும் நிறைகுறைகள் குறித்து, அதிகாரிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கனிவுடன் பேசி, தீர்வுகள் குறித்து விபரிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement