விளையாட்டு செய்தி// அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி விருதுநகர் தி இந்து பள்ளி முதலிடம்
சென்னை, தேசிய பூப்பந்தாட்ட போட்டியில், விருதுநகர் தி இந்து பள்ளி முதலிடம் பிடித்தது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி சார்பில், தேசிய அளவிலான பால் பேட்மின்டன் எனும் பூப்பந்தாட்ட போட்டி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
பள்ளிகளுக்கு இடையிலான இப்போட்டியில், 12 பள்ளி அணிகள், நான்கு பிரிவாக பிரித்து, லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் மோதின.
சூப்பர் லீக் ஆட்டத்தில் திருவிடைமருதுார் டி.ஏ.எச்.எஸ்., பள்ளி அணி, 3 - 0 என்ற கணக்கில், மாமல்லபுரம் அரசு பள்ளியை தோற்கடித்தது.
மற்றொரு போட்டியில், விருதுநகர் தி இந்து பள்ளி, 3 - - 0 என்ற செட் கணக்கில் மாமல்லபுரம் அரசு பள்ளியை வீழ்த்தியது.
அடுத்த நடந்த போட்டிகளில், இந்து பள்ளி இரண்டு போட்டிகளிலும், திருவிடைமருதுார் டி.ஏ.எச்.எஸ்., ஒரு லீக் போட்டியிலும் வெற்றி பெற்றன.
அனைத்து லீக் போட்டிகள் முடிவில், விருதுநகர் இந்து பள்ளி முதலிடத்தையும், திருவிடைமருதுார் டி.ஏ.எச்.எஸ்., பள்ளி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின.
மாமல்லபுரம் அரசு பள்ளி மூன்றாம் இடம், திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தன.
***