சினிமா தயாரிப்பு நிறுவனம் லட்சுமி ஹெப்பால்கர் துவக்கம்

பெங்களூரு:கர்நாடக மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், தற்போது திரையுலகிலும் கால் பதிக்கிறார்; தன் பேத்தி பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.

கர்நாடகாவில் அரசியல்வாதிகள் திரையுலகுக்கு வருவது புதிய விஷயமல்ல. மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி குடும்பத்தினர் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். அமைச்சர்கள் ஜமீர் அகமது கான், செலுவராயசாமி உட்பட பல அரசியல் தலைவர்களின் பிள்ளைகள், திரையுலகில் உள்ளனர்.

தற்போது, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், தயாரிப்பாளராக மாறியுள்ளார். தன் பேத்தி பெயரில், 'ஐரா புரொடக்ஷன் ஹவுஸ்' என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில், இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இவற்றில், பிரபல நடிகர்கள் ரமேஷ் அரவிந்த், கணேஷ், தனஞ்செய் நடிக்கின்றனர்.

Advertisement