ஒருவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : ரேஷன் கடை விற்பனையாளரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மோட்சகுளத்தைச் சேர்ந்தவர் முருகன், 33; ஆர்.ஆர்.பாளையம் ரேஷன் கடையில் விற்பனையாளர்.

இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அதே பகுதியைச் ரத்தினவேல் மனைவி அமிர்தம் பொருட்கள் வாங்க வந்தார்.

அப்போது இ.கே.ஒய்.சி., திட்டத்தில் புதுப்பிக்க குடும்ப உறுப்பினர்களை அழைத்துவருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

இதனையறிந்த அமிர்தம் மகன் கோதண்டராமன், 35; மற்றும் அவரது நண்பர்கள் ராமன், சதீஷ் ஆகியோர் முருகனிடம் தகராறு செய்து திட்டி, தாக்கி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

புகாரின் பேரில், கோதண்டராமன் உட்பட 3 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement