பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பா?
திருவாரூர் மாவட்டம், காரியாங்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியின் குடிநீர் தொட்டியில், மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது.
மணவர்களுக்கான காலை உணவை சமைக்க வைத்திருந்த உபகரணங்களை சேதப்படுத்தி, குடிநீர் தொட்டியிலும் மலக்கழிவுகளை கொட்டி இருப்பதாக வெளிவந்துள்ள தகவல், காவல் துறை மீது பயமே இல்லாததையே காட்டுகிறது.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல், பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர் தொட்டி வரை, சமூக விரோதிகளால் மலம் கலக்கப்படும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்?
தொடக்கப் பள்ளி சிறுவர் - சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனே தீவிர விசாரணை நடத்தி, குற்றம் புரிந்த சமூக விரோதிகளை தி.மு.க., அரசு கைது செய்ய வேண்டும்.
- நாகேந்திரன்
தமிழக பா.ஜ., தலைவர்
மேலும்
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி