ஊழியர் கொலையில் மேலாளர் கைது

பெங்களூரு தெற்கு: மைக்ரோ பைனான்ஸ் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கிளையின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

மைசூரு மாவட்டம், டி நரசிபுரா தாலுகாவில் உள்ள கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் தர்ஷன், 20. இவர், பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வீடுகளுக்கு சென்று கடன் வசூலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.

கடந்த 9ம் தேதி தர்ஷனினின் அலுவலகத்தில் இருந்து அவரது தந்தை ராஜுவுக்கு, 58, மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது. அலுவலகத்தில் தர்ஷன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது தந்தை அலுவலகத்திற்கு விரைந்து சென்றார்.

தன் மகன் தர்ஷன் மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கனகபுரா போலீஸ் நிலையத்தில் ராஜு புகார் அளித்தார். புகாரில், கிளையின் மேலாளர் ரேவண்ணா, மூத்த ஊழியர்கள் ரேணுகா சர்மா, சச்சின் ஆகியோரே தன் மகனை கொலை செய்திருக்க வேண்டுமென கூறியிருந்தார்.

போலீசார் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், கிளை மேலாளர் ரேவண்ணாவை கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement