அ.தி.மு.க., பொதுச்செயலருக்கு விருத்தாசலத்தில் வரவேற்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மக்களை சந்திந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருள்அழகன், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், நகர செயலர் சந்திரகுமார், நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரவு மண்டல செயலர் வழக்கறிஞர் அருண், மாவட்ட வழக்கறிஞர் பிரவு செயலர் விஜயகுமார், தலைவர் தங்கராசு, ஒன்றிய செயலர்கள் வேல்முருகன், தம்பிதுரை, பச்சமுத்து, சின்ன ரகுராம், பேரூர் செயலர் பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா வேங்கடவேணு, சார்பு அணி செயலர்கள் ராஜேந்திரன், ஆனஸ்ட்ராஜ், வெங்கடேசன், ரமேஷ், திருப்பதி, அருள், சக்திபாலன் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பா.ஜ., ஐ.ஜே.கே., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement