லோயர்கேம்ப் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் காஸ் கசிவு -அருகில் வசித்த பொதுமக்கள் பாதிப்பு

கூடலுார்: லோயர்கேம்ப் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரினேசன் காஸ் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
கூடலுார் அருகே லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதற்காக முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு ராட்சத நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் பகிர்மான குழாய் மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு திறந்து விடப்படும். இதற்கு முன்பாக குளோரினேசன் செய்து குடிநீர் வினியோக்கப்படும்.
குடிநீரில் குளோரினேசன் கலப்பதில் சிரமம் ஏற்படுவதால் காஸ் மூலம் சரியான அளவில் குடிநீரில் குளோரின் கலக்கும் வகையில் சிலிண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கூடலுார் நகராட்சிக்கு தனியாகவும், கம்பம் நகராட்சிக்கு தனியாகவும் உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட குளோரினேசன் காஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. பாதித்த ஐவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இது குறித்து குடிநீர் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் உடனே கசிவு ஏற்பட்ட காஸ் சிலிண்டர் நிறுத்தப்பட்டது.
தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூடலுார் நகராட்சிக்கு வினியோகிக்கப்பட்ட குளோரினேசன் காஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு உடனடியாக சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பு சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு இதனை முழுமையாக சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் முன்வர வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
-
அமலோற்பவம் பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
-
சிதம்பரம் வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை வரவேற்க பாண்டியன் எம்.எல்.ஏ., அழைப்பு