அச்சுறுத்திய காட்டுயானைகள் அச்சம் அடைந்த தொழிலாளர்கள்

மூணாறு: கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கு பகுதியில் அச்சுறுத்தும் வகையில் காட்டு யானைகள் நடமாடியதால் தொழிலாளர் அச்சம் அடைந்தனர்.

மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு காய்கறி, உணவு ஆகிய கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுவதால், அவற்றை தின்பதற்கு படையப்பா, ஒற்றை தந்தங்களைக் கொண்ட 2 ஒற்றை கொம்பன்கள் உட்பட பல காட்டு யானைகள் நாள் கணக்கில் முகாமிடுவது வழக்கம். தற்போது அப்பகுதியில் எட்டு யானைகளை கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளன. அவை அச்சுறுத்தும் வகையில் நேற்று நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

Advertisement