கடன் பிரச்னையில் ஒருவக்கு கத்திகுத்து

தேனி: பெரியகுளம் அருகே கீழகாமக்காபட்டி அஜித்குமார் 25. இவரது தாய் வடுகபட்டியில் உள்ள சாந்தி, பவித்ரன் என்பவரின் தாயிடம் கடன் வாங்கி இருந்தார்.

கடனை திருப்பி தருவதாக அஜித்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில் வடுகபட்டி ஹைஸ்கூல் தெரு அருகே அஜித்குமார் நடந்து சென்றார். அங்கு நின்றிருந்த பவித்ரன் அவரது நண்பர்கள் பாண்டீஸ்வரன், அருண், விஜி, தனுஷ் ஆகியோர் பணத்தை கேட்டனர்.

இதில் பிரச்னை ஏற்பட்டு அவர்கள் வைத்திருந்த கத்தியால் அஜித்குமார் காதில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

அஜித்குமார் புகாரில் பவித்ரன் அவரது நண்பர்கள் உட்பட ஐவர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement