லட்ச தீப ஆராதனை

விருதுநகர்: காமராஜரின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் நேற்று மாலை 6:30 மணிக்கு காமராஜர் மீண்டும் பிறந்து வரவும், பூரண விலக்கை அமல்படுத்தவும், இலவச மருத்துவம் வழங்கவும் வலியுறுத்தியும் லட்ச தீபம் ஏற்றினர்.

இதில் கே.வி.எஸ்., மேனேஜிங் போர்டு, ஹிந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்கு கடை மகமை,காமராஜர் பொறியியல் கல்லுாரி நிர்வாகிகள், வி.வி.வி.,கல்லுாரி பரிபாலன சபை, கே.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி, பெண்கள் பள்ளிநிர்வாக சபை, செந்திக்குமார நாடார் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர். இரவு வள்ளிக்கும்மி ஆட்டமும், பெருஞ்சலங்கை ஆட்டமும், வாணவேடிக்கையும் நடந்தது.

Advertisement