அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தின் உள்ளே இருந்து மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர், செயலாளர், மகளிர் துணைக்குழு அமைப்பாளர், மாவட்டத் தலைவர், செயலாளர் உள்ளிட்டோரை விருதுநகர் டி.எஸ்.பி., யோகேஷ்குமார், எஸ்.ஐ., ராமர் உள்ளிட்ட போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார்.

செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் குருசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா பேசினர்.

Advertisement