இன்று கல்வி வளர்ச்சி நாள்; மாணவர்களுக்கு போட்டிகள் 

கோவை; காமராஜரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாககொண்டாடப்படுகிறது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள்வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்க, பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1,500, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1,000, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.500 என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement