தட்சசீலா பல்கலையில் ஆசிரியர்கள் கவுரவிப்பு 

விழுப்புரம் : திண்டிவனம், ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை கவுரவிக்கும் 'மாஸ்டர்ஸ் ஆப் இம்பாக்ட்' நிகழ்ச்சி நடந்தது.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், டாக்டர் நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் புலம் டீன் தீபா வரவேற்றார். பதிவாளர் செந்தில், துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர் வாழ்த்தி பேசினர். பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் பேசினார்.

நிகழ்ச்சியில், இணை பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்ரமணியன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை டீன் சுபலட்சுமி, மருத்துவ புலங் களின் டீன் ஜெயஸ்ரீ, தரம் மற்றும் அங்கீகாரங்கள் துறை டீன் சீத்தாராமன் உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். வணிக மேலாண்மை புல பொறுப்பாளர் குரு நன்றி கூறினார்.

Advertisement