கிரேன் மோதி பெண் பலி

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அருகே கிரேன் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

வில்லியனூர் அடுத்த கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பநாதன், இவரது மனைவிபரமேஸ்வரி, 42; இவர் நேற்று மாலை 6.45 மணியளவில், தனது விவசாய நிலத்தில் இருந்து மாட்டிற்கு புல்லை தலையில் எடுத்துக்கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்தார்.

அப்போது, கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து வில்லியனுார் நோக்கி வந்த கிரேன் எதிர்பாராத விதமாக பரமேஸ்வரி மீது மோதியது, இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரமேஸ்வரியின் தலையில் கிரேன் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி இறந்தார்.

தகவலறிந்த வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் கிரேன் ஓட்டுநர் மேற்குவங்கம் பகுதியைச் சேர்ந்த சத்யரஞ்சன் தாஸ்30, என்பவரை கைது செய்தனர்.

Advertisement