வளையமாதேவி வானவகோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சேத்தியாத்தோப்பு : வளையமாதேவி வானவகோடீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வானவகோடீஸ்வரர் என்கிற பானுகோடீஸ்வரர் உடனுறை பாலம்பிகை கோவில் உள்ளது.

இக்கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைத்து மகா கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

மாலை நவக்கிரஹ ஹோமமும், 11ம் தேதி தனபூஜை, லக்ஷ்மி ஹோமம், கோ பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி நடந்தது. 12ம் தேதி அஸ்திர ஹோமம், தீர்த்த சங்கிரஹணம், அக்னி சங்கிரஹணம், மிருத் சங்கிரஹணம், ஆச்சார்ய ரக்ஷாபந்தனம், கும்பஅலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல்கால யாக வேள்வி, மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, மகாபூர்ணாகுதி, மகா தீபாரானையும், மூன்றாம் கால யாக வேள்வி, மகா பூர்ணாகுதி, தீபாரதனை நடந்தது.

அதனை தொடர்ந்து நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், அங்குரார்பணம், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், நான்காம் கால யாக வேள்வி, தத்வார்ச்சனை, மஹா பூர்ணாகுதி தீபாராதனையுடன், கலசம் புறப்பாடாகி வானவகோடீஸ்வரர், பாலம்பிகை, ராஜகோபுரம் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement