குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயக்கி வைப்பு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலை பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் துவக்க விழா நடந்தது.

பெண் கல்வி துணை இயக்குநர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாணவிகள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.

கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன், தனியார் கிளினிக் லேப் தலைமை நிர்வாக அதிகாரி அழகரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர் மரிய மார்ட்டின் தலைமை தாங்கினார்.

மூத்த ஆசிரியர் இந்திரா வரவேற்றார். ஆசிரியர் இந்துமதி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் குபேரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement