அ.தி.மு.க., பொதுசெயலாளருக்கு வரவேற்பு; அமைப்பு செயலாளர் முருகுமாறன் அழைப்பு

காட்டுமன்னார்கோவில், ஜூலை 15-
காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு நாளை (16ம் தேதி) வரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைப்பு செயலாளர் முருகுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, நாளை (16ம் தேதி) காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தலைப்பில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
அதைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் கச்சேரி ரோட்டில் ரோட் ஷோ சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
திருச்சி சாலை குருங்குடி டோல்கேட் அருகில் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு அளிக்க உள்ளதால் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, சார்பு அணி நிர்வாகிகள், தொழிற் சங்க நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்