இங்கிலாந்துடன் இந்தியா பயிற்சி * பெண்கள் உலக கோப்பை தொடரில்...

துபாய்: உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து, நியூசிலாந்துடன் மோத உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13 வது சீசன் வரும் செப்டம்பர் 30ல் இந்தியாவில் துவங்குகிறது.
கடந்த 1978, 1997, 2013க்குப் பின், நான்காவது முறையாக இந்தியாவில் இத்தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உட்பட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். பைனல் நவ. 2ல் பெங்களூரு அல்லது கொழும்புவில் நடக்கும்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, செப். 30ல் தனது முதல் போட்டியில் இலங்கையை (பெங்களூரு) சந்திக்க உள்ளது.
இதற்கான பயிற்சி போட்டி அட்டவணை நேற்று வெளியானது. செப். 25 முதல் 28 வரை மொத்தம் 9 பகலிரவு போட்டிகள் நடக்க உள்ளன.
இந்திய அணி செப். 25ல் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மறுநாள் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்க உள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, செப்., 27ல் இங்கிலாந்துடன் பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளது.
மேலும்
-
வழக்கில் நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி., - ஏ.சி.,யை 'சஸ்பெண்ட்' செய்ய டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
-
தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சி அ.தி.மு.க., ஜெயகுமார் காட்டம்
-
கடலுார் - சென்னை சரக்கு கப்பல் அக்டோபரில் சேவை துவக்கம்
-
சீனாவில் ஆயுர்வேத சிகிச்சை கேரள டாக்டர் தம்பதிக்கு 'டிமாண்ட்'
-
பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு
-
ஒடிஷாவில் தீக்குளித்த மாணவி மரணம்: எதிர்க்கட்சிகள் நாளை பந்த் அறிவிப்பு