மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த இரு விரிவுரையாளர்கள் உட்பட 3 பேர் கைது

பெங்களூரு: மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கல்லுாரி விரிவுரையாளர்கள் இருவரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
கர்நாடகாவின் தட்சிண கன்னடாவின் மூடபித்ரியில் உள்ள தனியார் கல்லுாரியில் இயற்பியல் பாட விரிவுரையாளராக பணியாற்றியவர் நரேந்திரா, 32. இவருக்கும், கல்லுாரியில் படிக்கும் 21 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இயற்பியல் பாடம் தொடர்பான குறிப்புகளை, மாணவிக்கு கொடுத்து வந்துள்ளார். இதனால், இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசி உள்ளனர். நரேந்திரா மீது மாணவிக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
நண்பர் வீடு
கடந்த மாதம் நரேந்திராவும், மாணவியும் மூடபித்ரியில் இருந்து பெங்களூரு வந்தனர். மாரத்தஹள்ளியில் வசிக்கும் நண்பர் அனுாப் என்பவர் வீட்டிற்கு, மாணவியை நரேந்திரா அழைத்துச் சென்றார். அங்கு வைத்து மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டினார். இதுகுறித்து, கல்லுாரியில் உயிரியல் பாட விரிவுரையாளராக பணியாற்றும் தன் நண்பர் சந்தீப்பிடம், நரேந்திரா கூறி உள்ளார்.
இதனால் மாணவியிடம் பேசிய சந்தீப், “நீயும், நரேந்திராவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோ என்னிடம் உள்ளது. இதை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், நீ எனக்கு ஒத்துழைக்க வேண்டும்,” என மிரட்டி உள்ளார்.
வேறு வழியின்றி சந்தீப்புடன் அந்த மாணவி, பெங்களூரு வந்தார். அனுாப் வீட்டிற்கு அழைத்துச் சென்று சந்தீப் பலாத்காரம் செய்துள்ளார். பின், இருவரும் மூடபித்ரி திரும்பிவிட்டனர்.
கண்காணிப்பு கேமரா
இதையடுத்து மாணவியிடம் மொபைல் போனில் பேசிய அனுாப், 'நரேந்திரா, சந்தீப்புடன் நீ என் வீட்டிற்கு வருவது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. நரேந்திரா, சந்தீப்புடன் இருந்தது போன்று, என்னுடனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் மாணவி பெங்களூரு வந்தார். அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அனுாப்பும் பலாத்காரம் செய்துள்ளார்.
மூடபித்ரி திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாநில மகளிர் ஆணையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுடன், மகளிர் ஆணைய உறுப்பினர்கள் மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு, கடந்த 5ம் தேதி சென்றனர்.
நரேந்திரா, சந்தீப், அனுாப் மீது புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள், இதுபோன்று வேறு யாரையாவது மிரட்டி பலாத்காரம் செய்தனரா என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
உலக செஸ்: திவ்யா அபாரம்
-
பும்ராவை காயப்படுத்த திட்டமா * ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மீது புகார்
-
கால்பந்து: இந்திய வீராங்கனை ஓய்வு
-
வரலாறு படைத்தது வங்கதேசம்: 'டி-20' தொடரை கைப்பற்றியது
-
சிரியா ராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு; தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்
-
ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி: உயிர் தப்பிய 60 பயணிகள்