கால்பந்து: இந்திய வீராங்கனை ஓய்வு

புதுடில்லி: இந்திய பெண்கள் கால்பந்து அணி கோல் கீப்பர் ஆதித்தி சவுகான் 33. கடந்த 2008ல் இந்திய இளம் அணியில் (19 வயது) அறிமுகம் ஆனார். 2011ல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஒலிம்பிக் தகுதி போட்டியில் இந்திய சீனியர் அணிக்காக களமிறங்கினார்.
பெண்களுக்கான கால்பந்து லீக் தொடரில் ஸ்ரீபூமி அணிக்காக விளையாடினார். கடந்த 2015ல் இங்கிலாந்து கிளப் கால்பந்து தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். வெஸ்ட் ஹாம் பெண்கள் அணிக்காக விளையாடினார்.
தற்போது 17 ஆண்டு கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,'எனது வாழ்க்கையில் கால்பந்து இரண்டு பாகமாக உள்ளது. முதல் பாதியில் என்னால் முடிந்த அனைத்தையும் கால்பந்துக்கு கொடுத்தேன். இன்னும் இது மீதமுள்ளது. எனினும் இப்போதைக்கு மறக்க முடியாத 17 ஆண்டு நினைவுகளுடன், கால்பந்தில் இருந்து பெருமையுடன் விடை பெறுகிறேன்,' என தெரிவித்துள்ளார்.