10 மணி நேரம் மின் வெட்டு கானத்துார் மக்கள் மறியல்

கானத்துார், இ.சி.ஆர்., கானத்துாரில், 10 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், ஆவேசமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இ.சி.ஆர்., கானத்துார் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஒன்றரை மாதமாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது.
நேற்று முன்தினம், 10 மணி நேரம் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இரவில் மின்வினியோகம் வராததால், ஆவேசமடைந்த பகுதி மக்கள், இ.சி.ஆரில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
கானத்துார் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேசி சமாதானம் செய்ய, மின் வாரிய அதிகாரிகளை அழைத்தனர். அவர்கள் வர காலதாமதம் ஏற்பட்டது.
அதனால், போலீசார், பொதுமக்கள் மற்றும் மின்வாரிய அதிகாரியிடம் பேசியதையடுத்து, நள்ளிரவு மின் வினியோகம் சீரானது. இதனால், இ.சி.ஆரில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் கூறியதாவது:
பொழுதுபோக்கு மையங்கள், ரிசார்ட் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படுவதில்லை. சீரான மின்வினியோகம் வாரியம் வழங்குகிறது. மின் தடை ஏற்பட்டாலும் அங்கு உடனே சரி செய்யப்படுகிறது.
ஆனால், குடியிருப்பு பகுதிகளை கண்டுகொள்வதில்லை. எங்களுக்கும் சீரான மின் வினியோகம் வழங்க, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு