இன்றைய போர்களை வெற்றி கொள்ள நாளைய தொழில்நுட்பம் தேவை; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு

3

புதுடில்லி: "இன்றைய போர்களை வெற்றி கொள்ள நாளைய தொழில்நுட்பம் தேவை" என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.


டில்லியில், நடந்த பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில், அனில் சவுகான் பேசியதாவது: நேற்றைய ஆயுதங்களால் இன்றைய போர்களை வெல்ல முடியாது. இன்றைய போர்களை எதிர்த்துப் போராட நாளைய தொழில்நுட்பம் தேவை.

ட்ரோன் தொழில்நுட்பங்கள்



காலாவதியான ஆயுதங்களைக் கொண்டு இந்தியா நவீன போர்களை எதிர்கொள்ள முடியாது.
மே 10ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியபோது, பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியது. அவற்றில் எதுவும் இந்திய ராணுவத்திற்கோ அல்லது சிவில் உள்கட்டமைப்பிற்கோ எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.
ட்ரோன் தொழில்நுட்பங்களை உருவாக்குவது மிகவும் அவசியம்.

புரட்சிகரமானது



நாம் ட்ரோன்களைப் பற்றிப் பேசும்போது, இவை என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
போரில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவருகிறதா? என்று கேள்வி கேட்கிறீர்கள். அவற்றின் செயல்பாடுகள் மிகவும் புரட்சிகரமானது என்றும் நான் நினைக்கிறேன். பரிணாம மாற்றங்கள், போர் சண்டை உபகரணங்களை சிறியதாகவும், வேகமாகவும், இலகுவாகவும், திறமையாகவும், மலிவு விலையிலும் ஆக்கியுள்ளன. இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.

Advertisement