கருணாநிதி சிலை மீது பெயின்ட் ஊற்றிய டாக்டர் கைது
சேலம்: சேலத்தில், கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய டாக்டரை, போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது, நேற்று முன்தினம் கருப்பு பெயின்ட் ஊற்றப்பட்டு இருந்தது.
இது குறித்து தி.மு.க., மாநகர செயலர் ரகுபதி அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் அங்கிருந்த 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வயதான நபர் ஒருவர், பெயின்ட் டப்பாவுடன் சென்று கருணாநிதி சிலை அருகில் உள்ள, மின் இணைப்பை துண்டித்து, கருணாநிதி சிலை மீது பெயின்ட் பூசியது தெரிந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பெயின்ட் ஊற்றியது, சேலம் சங்கர் நகரை சேர்ந்த டாக்டர் விஸ்வநாதன், 77, என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் அஸ்தம்பட்டி போலீசார் கூறுகையில்,' டாக்டர் விஸ்வநாதன் மன நலம் பாதிக்கப்பட்டு, கருணாநிதி சிலையில் பெயின்ட் ஊற்றி உள்ளார்' என்றனர்.
மேலும்
-
படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை ஊர் மக்கள் பாராட்டு
-
தேடி சென்று நடிகரை சந்தித்த ரங்கசாமி; நாடி வந்த பழனிசாமியை தவிர்த்தது ஏன்?
-
வீடுகளில் பாம்பு புகுந்தால் பிடிக்க 'நாகம்' செயலி அறிமுகம்
-
காமராஜர் பிறந்த நாள் விழா திருமாவளவன் அன்னதானம்
-
அதிவேக செம்மண் லாரிகளால் மாணவர்கள் திக்...திக்...
-
கெங்கைகொண்டான் பேரூராட்சியில் 'நமஸ்தே' திட்ட பதிவு முகாம் துவக்கம்