காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மதுரை சுற்றுலா பயணி பலி

கொடைக்கானல்:திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானல் ஓராவி அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு மதுரை சுற்றுலா பயணி இறந்தார்.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் பரத் 25. நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா வந்த நிலையில் அஞ்சு வீடு அருகே உள்ள ஒராவி அருவிக்கு ஆற்றுப்படுகை வழியாக சென்றுள்ளார். நேற்று மதியத்திற்கு பின் கொடைக்கானலில் கனமழை கொட்டியதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பரத் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

எஞ்சிய 8 பேர் தப்பினர். கிராம மக்கள் உதவியுடன் பரத் உடல் இரவு மீட்கப்பட்டது. இந்த அருவிக்கு செல்லும் பாதை ஆபத்து நிறைந்ததாகவும், அடிப்படை வசதிகள் இன்றி விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் பலியாவதும் தொடர்கிறது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement