மதுக்கடையை அகற்ற ஆர்ப்பாட்டம் பால் கடையில் மது விற்பனை போலீசாரிடம் ஒப்படைப்பு
வடமதுரை,:திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் பால் கடையில் மது விற்கப்பட்டது. அங்கிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
செங்குறிச்சி அருகே குரும்பபட்டியில் தமிழர் தேசம் கட்சியினரும், பொதுமக்களும் இணைந்து இப்பகுதி மெயின் ரோடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே பகுதியில் உள்ள பால் கடையில் மது விற்பனை நடந்தது.
இதையறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மதுபாட்டில்கள், பீரோ உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதோடு மது விற்ற அலெக்ஸ் என்பவரை பிடித்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement