இடத்தகராறில் ஒருவர் அடித்துக்கொலை
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இடத்தகராறில் மரக்கட்டையால் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
மண்டபம் வேதாளை சூடவலைகுச்சி கிராமத்தை சேர்ந்த முனியசாமி மகன் அருண்பாண்டி 33. இவர் அதே ஊரைச் சேர்ந்த மனோகரன் மகள் பிரியதர்ஷினியை 26, காதலித்து திருமணம் செய்தார். இதே கிராமத்தில் அருண்பாண்டி என்பவர் 2 சென்ட் நிலம் வாங்கி புதிய வீடு கட்டி வருகிறார்.
இந்த இடம் அருகே பிரியதர்ஷினி தாய்மாமன் நாகசுந்தரம் 60, வசிக்கிறார். இந்நிலையில் நாகசுந்தரம், அருண்பாண்டி இடையே இடத்தகராறு ஏற்பட்டு அருண்பாண்டி வீட்டுக்குச் செல்லும் பாதையில் நாகசுந்தரம் கல்லை ஊன்றி மறைத்துள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் அருண்பாண்டி மாமனார் மனோகரன் கட்டையால் நாகசுந்தரத்தை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த நாகசுந்தரத்தின் சகோதரர்கள் நாகதாஸ் 58, நாகு 55, நாகசுந்தரம் மகன் நம்புகுமார் 35, ஆகியோர் அருண்பாண்டி, மனோகரனை தாக்கினர்.
இதில் மனோகரன், நாகசுந்தரம் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை மனோகரன் இறந்தார்.நாகசுந்தரம், நாகதாஸ், நாகு, நம்புகுமார் மீது மண்டபம் போலீசார் கொலை வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.