உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்கும் இடங்கள்
ஓசூர், ஓசூர், கெலமங்கலம், தளி, சூளகிரி, மத்துார், வேப்பனஹள்ளி ஒன்றியங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்கும் இடங்கள் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓசூர் ஒன்றியம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி பஞ்., மக்களுக்கு, நவதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று (ஜூலை 17) காலை, 9:00 முதல், மதியம், 3:00 மணி வரை, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்கிறது. கெலமங்கலம் ஒன்றியம், பெட்டமுகிலாளம் பஞ்., மக்களுக்கு, கெத்தஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திலும், தளி ஒன்றியம், கும்ளாபரம், உனிசேநத்தம், கோட்டமடுகு ஆகிய பஞ்.,க்களுக்கு, கும்ளாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், சூளகிரி ஒன்றியம், காட்டிநாயக்கனதொட்டி, பி.எஸ்., திம்மசந்திரம் பஞ்.,க்களுக்கு, காட்டிநாயக்கனதொட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
மத்துார் ஒன்றியம், சாமல்பட்டி, நாரலப்பள்ளி பஞ்.,க்களுக்கு, சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பனஹள்ளி ஒன்றியம், வேப்பனஹள்ளி, சிகரமாகனப்பள்ளி பஞ்.,க்களுக்கு, வேப்பனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று (ஜூலை 17) நடக்க உள்ளது. இவ்வாறு, அதில்
தெரிவித்துள்ளார்.