நீதிமன்ற சமரச மையம் விழிப்புணர்வு பேரணி


ஊத்தங்கரை, ஊத்தங்கரையில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஊத்தங்கரை ஒருங்கிணைந்த நீதிமன்ற சமரச மையம் சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

ஊத்தங்கரை சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்து, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர். ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவு பெற்றது.

பேரணியில், வாரத்தில், 7 நாட்களும் மாவட்ட மற்றும் வட்ட நீதிமன்றங்களில் சமரச மையம் செயல்படும் என்றும், நேரடியாகவோ அல்லது இணைய தள வழியிலோ, இரு தரப்பினர் சமரசம் நாடலாம் என்றும், தேசிய அளவில் நடக்கும் சிறப்பு சமரச முகாமில் பொதுமக்கள், 90 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளை நேரடியாகவோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமாக, சமரசம் செய்து கொள்ள கோரலாம் என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Advertisement