இயந்திர கோளாறால் மும்பையில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்; பயணிகள் அவதி!

மும்பை: நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இண்டிகோ விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அவதி அடைந்தனர்.
டில்லியில் இருந்து கோவாவுக்கு நேற்று (ஜூலை 16) இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 191 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, அவர் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். பின்னர் விமானம் கோவா விமான நிலையத்தில் பத்திரமாக நேற்றிரவு 9.53 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பணிகள் 191 பேரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்து கொடுத்தது. இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டில்லி விமான நிலையத்தில் இருந்து கோவா நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. வேறு வழி இல்லாத நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இண்டிகோ விமானம் புவனேஸ்வரிலிருந்து வடக்கே 100 கடல் மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.


மேலும்
-
ரஷ்யா கச்சா எண்ணெய்: நேட்டோ எச்சரிக்கையை நிராகரித்தது இந்தியா
-
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு: ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி
-
தேஜாஸ் போர் விமான இறக்கை: ஹெ.ஏ.எல்.,லிடம் ஒப்படைப்பு கோவை எல் அண்டு டி நிறுவனம் சாதனை
-
இந்திய பெண்கள் கலக்கல் வெற்றி * வீழ்ந்தது இங்கிலாந்து அணி
-
துாரந்த் கால்பந்து: ரூ. 3 கோடி பரிசு
-
பெரம்பலூர் மருதையாற்றில் கழிவுநீர்; வேடிக்கை பார்க்குது தமிழக அரசு: சீமான் குற்றச்சாட்டு