துாரந்த் கால்பந்து: ரூ. 3 கோடி பரிசு

கோல்கட்டா: ஆசியாவின் பழமை வாய்ந்த, இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடர் துாரந்த் கோப்பை. இதன் 134 வது சீசன் ஜூலை 23-ஆகஸ்ட் 23ல் நடக்க உள்ளது.
இதற்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு இம்முறை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 3 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரிசுத் தொகை ரூ. 1.05 கோடியாக இருந்தது. தவிர சிறந்த கோல் கீப்பர், 'கோல்டன் பூட்', 'கோல்டன் பால்' விருது பெறும் 3 வீரர்களுக்கு எஸ்.யு.வி., கார் பரிசாக வழங்கப்படும். வெற்றி பெறும் அணி, ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டு, கோப்பை வழங்கப்பட உள்ளது.
எத்தனை அணிகள்
கடந்த முறை 24 அணிகள் பங்கேற்றன. தற்போது ஐ.எஸ்.எல்., தொடர் துவங்குவது குறித்து எதுவும் தெரியாத நிலையில், இதில் இருந்து மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், முகமதன் ஸ்போர்ட்டிங், ஜாம்ஷெட்பூர், பஞ்சாப், நடப்பு சாம்பியன் வடகிழக்கு யுனைடெட் என 6 அணிகள் மட்டும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
தவிர, டிரிபுவன் ஆர்மி (நேபாளம்), ஆர்ம்டு போர்சஸ் (மலேசியா) என இரு வெளிநாட்டு அணிகளும் பங்கேற்க உள்ளன.
கோல்கட்டா, ஷில்லாங், ஜாம்ஷெட்பூர், இம்பால் உள்ளிட்ட இடங்களில் போட்டி நடக்க உள்ளன.
மேலும்
-
குழாய் உடைந்து குடிநீர் வீண்
-
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை உயர் நீதிமன்றம் உத்தரவு
-
நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி
-
சரக்கு வாகனம் கவிழ்ந்து பழங்குடியினர் மூவர் பலி வேலைக்கு சென்ற போது விபரீதம்
-
டிரைவர் கொலை: விடுதலைக்களம் கட்சி கண்டனம்
-
தொழிலாளியை தாக்கிய இருவருக்கு சிறை