ஓய்வு பெறுகிறார் ஆன்ட்ரி ரசல்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசின் ரசல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் 'ஆல்-ரவுண்டர்' ஆன்ட்ரி ரசல் 37. ஜமைக்காவை சேர்ந்த இவர், கடந்த 2010ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார். இதுவரை ஒரு டெஸ்ட் (2 ரன், ஒரு விக்.,), 56 ஒருநாள் (1034 ரன், 70 விக்.,), 84 சர்வதேச 'டி-20' (1078 ரன், 61 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2012, 2016ல் 'டி-20' உலக கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரசல் இடம் பெற்றிருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் வரும் ஜூலை 21, 22ல் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடக்கிறது. இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ரசல் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து ரசலின், 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
ரசல் கூறுகையில், ''வெஸ்ட் இண்டீசுக்காக விளையாடியதை என் வாழ்வின் மிகப் பெரிய சாதனையாக கருதுகிறேன். இதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். உச்சத்தில் இருக்கும் போதே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற விரும்புகிறேன்,'' என்றார்.
மேலும்
-
பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாமக்கல்லில் ஆசிரியர்கள் மறியல்: 60 பேர் கைது
-
ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு மக்கள் வழிபாடு
-
ஆபத்தான நிலையில் உள்ள நிழற்கூடம் அகற்றப்படுமா
-
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை
-
மாவட்ட சதுரங்க போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு