ஆபத்தான நிலையில் உள்ள நிழற்கூடம் அகற்றப்படுமா



கரூர், கரூர்- சேலம் பழைய சாலையில், சர்ச் கார்னர் பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து வாங்கல், மண்மங்கலம், வாங்கப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், நிழற்கூடத்தில் காத்திருந்து பஸ்களில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிழற்கூடத்தின் உட்பகுதி, மேல் பகுதியில் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், கட்டடம் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சில நேரம், கான்கிரீட் காரைகள் உதிர்ந்து பயணிகள் மீது விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. கூடத்தில் காத்திருப்பதற்கு பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் நிழற்கூடத்தை இடித்துவிட்டு புதிய நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

Advertisement