பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்
நாமக்கல், அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லுாரி சார்பில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முகாமை துணை கலெக்டர் மாறன் தொடங்கி வைத்தார்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எப்படி முன்மாதிரியாக திகழ்வது, சுய ஒழுக்கம் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மன அழுத்தத்தை போக்கும் வகையில், போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றும், பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், 'திறன்மேம்பாடு' என்ற தலைப்பில் பயிற்சியளிக்கப்பட
உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் பண மோசடிக்கு கமிஷன் பெற்ற இருவர் கைது
-
மதுரை- சினிமா- 18.07
-
100 நோயாளிகளுக்கு ஒரு 'லேப் டெக்னீசியன்' ஆய்வுக்கூட நுட்பனர் சங்கம் கோரிக்கை
-
மதுரை மாநகராட்சி முறைகேடு 2 கணினி ஆப்பரேட்டர்கள் கைது கைது எண்ணிக்கை 10 ஆக உயர்வு
-
ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு மதுரை மேயரை விசாரிக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ 'கறார்'
-
'ஓரணியில் தமிழகம்' என்று வீடுகளில் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டும் நாடகம் அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement