மாவட்ட சதுரங்க போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி குறுவட்ட மைய போட்டிகள், தற்போது நடந்து வருகிறது. இதில், சதுரங்க போட்டியில், அரவக்குறிச்சி, பரமத்தி வட்டாரத்திற்கான போட்டி, சின்னதாராபுரத்தில் நடந்தது.
அதில், 14 வயதுக்குட்பட்ட போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் வெற்றிபெற்று, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா, முதலிடம் பிடித்து மாவட்ட போட்டிக்கு
தேர்வானார்.
இதேபோல், 11 வயதுக்குட்பட்டோர் போட்டியில் மதனா, இரண்டாமிடம்; கூடைப்பந்து போட்டியில், ஆண், பெண் அணியினர், இரண்டாமிடம்; வளையப்பந்து போட்டியில், இரட்டையர் பிரிவில் கிருஷ்ணவேணி, யாழினி, இரண்டாமிடம் பிடித்தனர். இவர்கள், மாவட்ட போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர், பட்டதாரி ஆசிரியர் சகாய வில்சன், ஊக்குவித்த பட்டதாரி ஆசிரியர் ஷகிலாபாணு, ரூபா ஆகியோரை, வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, தர்மராஜ் மற்றும் தலைமையாசிரியர் சாகுல்அமீது ஆகியோர் பாராட்டினர்.