மெஸ்சி அணி ஏமாற்றம்: மேஜர் லீக் கால்பந்தில்

சின்சினாட்டி: மேஜர் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்சி ஏமாற்ற, இன்டர் மயாமி அணி தோல்வியடைந்தது.
அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து 30வது சீசன் நடக்கிறது. சின்சினாட்டியில் நடந்த போட்டியில் இன்டர் மயாமி, சின்சினாட்டி எப்.சி., அணிகள் மோதின. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்சி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இன்டர் மயாமி அணி 0-3 என தோல்வியடைந்தது. தொடர்ச்சியாக 5 போட்டியில் அசத்திய இன்டர் மயாமி அணியின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தவிர, மேஜர் லீக் கால்பந்து வரலாற்றில் 5 போட்டியில், குறைந்தபட்சம் தலா 2 கோல் அடித்து சாதனை படைத்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்சியின் கோல் மழைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவர், மான்ட்ரியல் (மே 29, ஜூலை 6), கொலம்பஸ் (ஜூன் 1), நியூ இங்கிலாந்து (ஜூலை 10), நாஷ்வில்லி (ஜூலை 13) அணிகளுக்கு எதிராக தலா 2 கோல் அடித்திருந்தார். நடப்பு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி, முதலிடத்தை நாஷ்வில்லி அணியின் சாமுவேல் சுரிட்ஜிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 16 கோல் அடித்துள்ளனர்.
மேலும்
-
ஆன்லைன் பண மோசடிக்கு கமிஷன் பெற்ற இருவர் கைது
-
மதுரை- சினிமா- 18.07
-
100 நோயாளிகளுக்கு ஒரு 'லேப் டெக்னீசியன்' ஆய்வுக்கூட நுட்பனர் சங்கம் கோரிக்கை
-
மதுரை மாநகராட்சி முறைகேடு 2 கணினி ஆப்பரேட்டர்கள் கைது கைது எண்ணிக்கை 10 ஆக உயர்வு
-
ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு மதுரை மேயரை விசாரிக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ 'கறார்'
-
'ஓரணியில் தமிழகம்' என்று வீடுகளில் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டும் நாடகம் அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு