ஒரே ஓவரில் 5 சிக்சர்: ஹெட்மயர் விளாசல்

கயானா: குளோபல் சூப்பர் லீக் போட்டியில் கயானா அணியின் ஹெட்மயர், ஒரே ஓவரில் 5 சிக்சர் பறக்கவிட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சார்பில், குளோபல் சூப்பர் லீக் ('டி-20') 2வது சீசன் நடக்கிறது. கயானாவில் நடந்த லீக் போட்டியில் கயானா வாரியர்ஸ் அணி (128/6, 16.3 ஓவர்) 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை (125/10) வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 6 போட்டியில், 3ல் வென்ற கயானா அணி, 6 புள்ளிகளுடன் பைனலுக்கு முன்னேறியது. பைனலில் (ஜூலை 19) கயானா அணி, 'நடப்பு சாம்பியன்' ரங்க்பூர் ரைடர்ஸ் (வங்கதேசம்) அணியை சந்திக்கிறது.
இப்போட்டியில் பேபியன் ஆலன் (ஹோபர்ட்) வீசிய 10வது ஓவரில் அசத்திய கயானா அணியின் ஷிம்ரன் ஹெட்மயர் சிக்சர் மழை பொழிந்தார். முதல் 4 பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய இவர், அடுத்த பந்தில் 2 ரன் எடுத்தார். கடைசி பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட, இந்த ஓவரில் 32 ரன் விளாசினார். ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்த ஹெட்மயர், 10 பந்தில் 39 ரன் (6 சிக்சர்) குவித்தார்.

Advertisement