போதை பொருள் சப்ளை செய்த இருவர் சிக்கினர்

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில், கட்டுமான தொழிலாளர்களுக்கு, கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்டவற்றை சப்ளை செய்த இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

சோழிங்கநல்லுார் ஏரிக்கரையில், போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று, அந்த இடத்தில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இரண்டு பேர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், செம்மஞ்சேரி, காந்தி நகரை சேர்ந்த பாபு, 28, அய்யப்பன், 28, என தெரிந்தது.

இவர்கள் இருவரும், ஓ.எம்.ஆரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு, கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்து உள்ளனர்.

இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, ஒரு கிலோ கஞ்சா மற்றும் 180 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement