போலீஸ் வாகனம்; எஸ்.பி., ஆய்வு

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஏ.டி.எஸ்.பி., - டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களின் வாகனங்கள், ரோந்து டூவீலர், 'பேட்ரோல்' வாகனம் உட்பட வாகனங்களின் தகுதி குறித்து ஆய்வு மாதந்தோறும் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.

அவ்வகையில், 50 வாகனங்களின் தகுதி குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஒவ்வொரு வாகனங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து, வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை கூறினார். இரண்டாம் கட்டமாக வரும், 20ம் தேதி ஆய்வு நடக்கிறது.

Advertisement