ரூ.2 கோடி சொத்து அபகரிப்பு உடந்தையாக இருந்தவர் கைது

சென்னை, :போலி ஆவணம் வாயிலாக, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரிக்க உடந்தையாக இருந்தவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னையை பூர்விகமாக கொண்ட விஸ்வநாதன் மகாதேவன் என்பவர், தற்போது குடும்பத்துடன் டில்லியில் வசித்து வருகிறார்.

இவருக்கு சொந்தமாக கொளத்துாரில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 4,861 சதுரடி சொத்தை சிலர் போலி ஆவணம் வாயிலாக அபகரித்தனர். இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

நில மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சொத்து அபகரிப்பில் ஈடுபட்ட, டுமீல் குப்பத்தைச் சேர்ந்த பாட்ரிக், கமலக்கண்ணன் ஆகிய இருவரை, 2023ம் ஆண்டு கைது செய்தனர்.

மேலும் வழக்கில் தலைமறைவான நீலாங்கரையைச் சேர்ந்த பச்சையப்பன், 44, என்பவரை தேடி வந்தனர். நேற்று அவர் போலீசில் சிக்கினார்.

கைதான பச்சையப்பன், போலி ஆவணங்கள் தயாரிக்கவும், பத்திர பதிவுக்கு சாட்சி கையொப்பமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement